மத்தியபிரதேச மாநிலத்தில் மது கொள்கையை அமல்படுத்தாவிட்டால் அங்கு கோசாலைகளைத் தொடங்குவோம் என்று உமா பாரதி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மா நிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் தலைமையிலான சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
போபாலில் உள்ள அயோத்யா நகர் பகுத்யில் உள்ள அனுமன் மற்றும் துர்கா கோவிலுக்கு பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான உமாபாரதி சென்றிருந்தார்.
அப்போது, கோவிலுக்கு முன் மதுக்கடை இருந்ததைப் பார்த்து, அவர் கூறியதாவது: கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ளட் பாருடன் இணைந்த மதுக்கடையை அகற்ற வேண்டும். முதல்வர் என்னிடம் ஜனவரி 31 ஆம் தேதி புதிய மதுக்கொள்கை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆனால், இன்னும் அதை அறிவிக்கவில்லை. அவர் அந்தக் கொள்கையை அறிவிக்கும் வரை என்னால் எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால், வரும் 3 ஆம் தேதி கோசாலைகளை தொடங்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.