Publish Date: Fri, 13 Mar 2026 (13:23 IST)
Updated Date: Fri, 13 Mar 2026 (13:25 IST)
நடிகர் விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு கொடுத்தார். அதில் 2021 முதல் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் நாங்கள் வீட்டில் இருக்கும்போதே விஜய் அந்த நடிகை வீட்டுக்கு கூட்டி வந்ததாகவும் கூறி பரபரப்புகளை ஏற்படுத்தினார்.
துவக்கத்தில் நடிகையுடனான உறவை விட்டு விடுவதாக என்னிடம் விஜய் கூறினார். ஆனால், கொஞ்சமும் மனசாட்சியின்றி அந்த கள்ள உறவை தொடர்ந்தார்.. குழந்தைகளுக்காக இத்தனை வருடங்கள் பொறுத்திருந்தேன்.. தற்போது வேறு வழியில்லை என்பதால் விவாகரத்து கேட்டு வந்திருக்கிறேன் என சங்கீதா அந்த மனுவில் கூறியிருந்தார்.. மேலும், நடிகையின் பெயரை குறிப்படவில்லை. அதேநேரம், தேவைப்பட்டால் நடிகை மீதும் வழக்கு தொடர்வேன் என எச்சரித்திருந்தார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய் திரிஷாவை அழைத்துக் கொண்டு சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு சென்றார்.. சங்கீதா செய்வதற்கு விஜய் கொடுத்த பதிலடியாக இது பார்க்கப்பட்டது. இதையஎடுத்து விஜயையும், திரிஷாவையும் பலரும் விமர்சிக்க தொடங்கினார்கள். விஜயின் திருமண வாழ்க்கையை மட்டுமல்ல.. அரசியல் வாழ்க்கையும் திரிஷா காலி செய்துவிட்டார் என பலரும் சமூக வலைதளங்களில் பேசினார்கள். ஆனால் விஜயும், திரிஷாவும் இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை..
இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையம் வந்த திரிஷாவிடம் விஜயுடன் நீங்கள் திருமணத்திற்கு சென்றது சர்ச்சையானது பற்றி என்ன சொல்கிறீர்கள்? என செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு எந்த பதிலையும் கூறாமல் வேகமாக நடந்து அங்கிருந்து சென்று விட்டார் திரிஷா..
Mahendran
Publish Date: Fri, 13 Mar 2026 (13:23 IST)
Updated Date: Fri, 13 Mar 2026 (13:25 IST)