Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை ஸ்ரீலீலாவை சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்தார்!

நடிகை ஸ்ரீலீலாவை சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்தார்!

J.Durai

, செவ்வாய், 2 ஜூலை 2024 (10:11 IST)
சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா குழும நிறுவனங்களின் புதிய லோகோவை தலைவர் பூமிநாதன்  மற்றும் நடிகை ஸ்ரீலீலா வெளியிட்டனர். 
 
மேலும் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரிக்கான பிரத்யேக இணைய தளத்தையும் நடிகை ஶ்ரீலீலா தொடங்கி வைத்தார். 
 
அத்துடன் ஏவியேஷன் படிப்பில் இணைந்த முதல் 10 மாணவர்களுக்கு அனுமதி சான்றிதழ்களையும் ஶ்ரீலீலா வழங்கினார்.
 
இதனை தொடர்ந்து ஸ்ரீலீலாவின் திரைப்பயணம் மற்றும் அவரது திரையுலக வெற்றி தொடர்பான ஏ.வி. ஒளிபரப்பப்பட்டது. 
 
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய ஶ்ரீலீலா,  மாணவர்களிடையே தலைமைப் பண்புகளை வளர்ப்பதற்கும், மேம்பாடு அடைந்துவரும் கேட்டரிங் துறையில்,   மாணவர்களின் வெற்றிக்கு தயார்படுத்தும் சென்னையின் அமிர்தாவின் செயல்பாடுகளை பாராட்டினார்.  
 
சென்னைஸ் அமிர்தாவின்  நவீன கல்வித் தரம்,மற்றும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு நிகரான உள்கட்டமைப்புகள் மற்றும் 
சர்வதேச அளவில் சுமார் 25,000 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த முதல் நிறுவனம் என்பதையும், 
மாணவர்களுக்கு படிக்கும்போதே பகுதி நேர வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோழிச் சில்லியில் குருணை மருந்தை கலந்து கொடுத்த கொடூரம்! துடிதுடித்து இறந்த நாய், பூனைகள்..