பாராளுமன்றத்தில் இன்று ராகுல் காந்தியின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அந்த பேச்சை கொண்டாடி வருகின்றனர். ஆனால் பாஜக தரப்பும் பாஜகவின் கூட்டணி கட்சிகளும் ராகுல் காந்தியின் பேச்சுக்கு காட்டும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் எப்படி பேசக்கூடாது என்பதற்கு சிறந்து எடுத்துக்காட்டு இன்றைய ராகுல் காந்தியின் பேச்சு. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த படுதோல்வி ராகுலை விரக்தியின், வெறுப்பின் உச்சத்தில் கொண்டு போயுள்ளது என்பதையே ராகுலின் இன்றைய முதிர்ச்சியற்ற, ஆணவ பேச்சு உணர்த்துகிறது. காங்கிரஸ் தொடர்ந்து அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதற்கான அச்சாரம் இன்றைய பேச்சு.
ஹிந்து என்றால் திருடன் என்றவர்களையும், ஹிந்து கோவில்களில் ஆபாச சிலைகள் உள்ளன என்றவர்களையும், ஹிந்து மதத்தை அழிப்பேன் என்று கொக்கரித்தவர்களையும் ஆதரித்து, கூட்டணி அமைத்து, ஓட்டுக்காக, அந்த ஓட்டு தரும் பணத்துக்காக சிறுபான்மையினரை தாஜா செய்யும் ராகுல் ஹிந்துவா? இல்லை போலி ஹிந்து!