நடிகர் திவாகர் என்பவர் மீது நடிகை ஷகிலா போலீசில் புகார்.. என்ன காரணம்?

Mahendran
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (16:35 IST)
சமூக வலைத்தளங்களில் பிரபலமான நடிகர் திவாகர் மீது, நடிகை ஷகிலா சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், திவாகர் சாதி ரீதியான கருத்துக்களை பேசி சமூக நல்லிணக்கத்தை கெடுப்பதாக தெரிவித்துள்ளார்.
 
கவின் ஆணவக்கொலையை நியாயப்படுத்தியும், சாதி ரீதியான வெறுப்பு பேச்சுகளை பேசியும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க திவாகர் முயற்சிப்பதாக ஷகிலா தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஷகிலா கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்த எதிர்பாராத புகார், தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை ஆணையர் இந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் பிரதமரின் இந்திய வருகை திடீர் ரத்து.. என்ன காரணம்?

குமரிக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

உங்க வீட்ல எல்லாரும் சினிமா!. கேக்குறவன் கேனையனா இருந்தா!.. விஜயை தாக்கிய கருணாஸ்!...

சிகரெட் லைட்டரை தர மறுத்ததால் இளைஞர் படுகொலை! தப்பியோடிய மர்ம நபர்கள்..!

தவெகவில் இணைகிறாரா செங்கோட்டையன்?!... அரசியல் பரபர!...

அடுத்த கட்டுரையில்
Show comments