திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கேரள பக்தர்களிடம் தரிசனத்திற்காக 11,000 ரூபாய் கேட்கப்பட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவிலிருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற பக்தர்களில் ஒருவரிடம், தரிசனம் செய்வதற்கு 11,000 ரூபாய் கேட்டதாகவும், 4 பக்தர்களிடம் 44,000 ரூபாய் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், கோவில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகத்தைத் தொடர்புகொண்டபோது, "இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தி உணர்வுடன் வரும் பக்தர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதும், பகல் கொள்ளை நடத்துவதும் மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.