Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனம்திறந்த நயன்தாரா: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை!

Advertiesment
நயன்தாரா
, திங்கள், 25 மார்ச் 2019 (15:34 IST)
நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவை தரக்குறைவாக விமர்சித்து பேசியதற்கு திரையுலகினர் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

 
விக்னேஷ் சிவன், சின்மயி உள்ளிட்ட பலர் பெண் என்றும் பாராமல் மிக மோசமான இந்த விமர்சனத்தை செய்த ராதாரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 
 
மேலும் ராதாரவி, நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. அதற்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் மனம் புண்பட்டிருந்தால் நான் அவர்களிடம் நேரடியாக சென்று மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். 
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. 
 
கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதோடு திமுகவிலிருந்து ராதாரவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில், நடிகை நயன்தாரா ராதா ரவி பேசியது குறித்து எதுவும் பேசாமல் இருந்த நிலையில், ஸ்டாலின் போட்ட டிவிட்டிற்கும், ராதா ரவி மீது அவர் எடுத்த நடவடிக்கைக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் நடிகர் சங்கத்திற்கும் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அந்த அறிக்கையின் புகைப்படம் பின்வருமாறு...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் இறக்குமதி தொடரும் சிக்கல் – 5.5 சதவீதம் சரிவு !