Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை மீரா மிதுன் மனநல சிகிச்சையில் இருக்கின்றாரா? நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்த தகவல்..!

Advertiesment
மீரா மிதுன்

Siva

, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (07:53 IST)
பட்டியல் இன சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன், டெல்லியில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 
மீரா மிதுன் தொடர்பான வழக்கில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி கடந்த முறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தற்போது அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை சென்னைக்கு அழைத்து வர இயலவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
காவல்துறையின் இந்த தகவலையடுத்து, இந்த வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த செய்தி, சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மீரா மிதுன், ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மனநிலை, பொதுமக்களிடையேயும், ரசிகர்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகளையும், யூகங்களையும் எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு நிச்சயதார்த்தம்! நீண்ட நாள் காதலியை கரம் பிடிக்கிறார்..!