எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் எஸ்.வி.சேகர் தலைமறைவானார்.
மேலும், முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரை கைது செய்ய தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், அவரின் முன் ஜாமீன் மனுவை ரத்து செய்தது.
அதனையடுத்து எஸ்.வி.சேகரை கைது செய்ய சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், பெண் பத்திரிக்கையாளரை சமூகவலைதளங்களில் அவதூறாகப் பேசிய வழக்கில் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்வி.சேகர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.