ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த சென்னை காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் அவர்களுக்கு நேற்று முதல்வர், துணைமுதல்வர் உள்பட பலரும் மலரஞ்சலி செலுத்திய நிலையில் பெரியபாண்டியனின் சொந்த ஊரான மூவிருந்தாளி சாலைப்புதூர் கிராமத்தில் நேற்று அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் வீரத்திருமகன் பெரியபாண்டியனுக்கு நடிகர் சங்க தலைவர் விஷால் ஏற்கனவே இரங்கல் தெரிவித்திருந்த நிலையில் இன்று நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி பெரிய பாண்டியனின் சொந்த ஊருக்கு வருகை தந்தார்
பெரியபாண்டியனின் நெருங்கிய உறவினர்களை நேரில் சந்தித்த கார்த்தி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார் ஏற்கனவே நடிகர் கார்த்தி நேற்று தனது டுவிட்டரில் பெரியபாண்டியனின் வீர மரணத்திற்கு ஒரு சல்யூட் என்று பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.