Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு மரியாதையுடன் பெரியபாண்டியன் உடல் நல்லடக்கம்: சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்

Advertiesment
periyapandian
, வெள்ளி, 15 டிசம்பர் 2017 (04:21 IST)
ரியல் தீரன் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் நேற்று அவரது உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து மதுரை வழியாக அவரது சொந்த ஊரான மூவிருந்தாளி சாலைப்புதூர் வந்தடைந்தது! கிராம மக்களும் உறவினர்களும் பெரியபாண்டியனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்

சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார். நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக வாழ்ந்து சென்றவருக்கு அனைவரும் வீர வணக்கம் செலுத்திய பின்னர் பெரியபாண்டியன் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அணிவகுப்பு மரியாதை முடிந்து, மூவர்ண கொடி போர்த்தியப்படி பெரியபாண்டியனின் உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பிறகு அவருக்கு சொந்தமான நிலத்தில் மூதாதையர்கள் அருகில் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கும் திருநாவுக்கரசர், வைகோ, மாவட்ட ஆட்சியர், தென்மண்டல IG, மாவட்ட SP உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பெரியபாண்டியனின் உடல் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க  நல்லடக்கம் செய்யப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவறான புரிதல்: பெரியபாண்டியனுக்காக ஆரம்பிக்கப்பட்ட வங்கிக்கணக்கு மூடல்