Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 21 April 2025
webdunia

அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் - கமல்ஹாசன் அதிரடி டிவிட்

Advertiesment
Kamalhaasan
, வெள்ளி, 5 ஜனவரி 2018 (11:33 IST)
சம்பள உயர்வு குறித்து தமிழக அரசுக்கும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் நேற்று மாலை முதல் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை.

 
ஒரு சில பேருந்துகளை ஓட்டுனர்கள் பாதியில் நிறுத்திவிட்டு பேருந்துகளை இயக்க மறுத்ததால் நடுவழியில் பயணிகள் அவதிக்குள்ளாயினர். இதனால் தமிழ்நாடு முழுவதும் வேலை முடிந்து விட்டு வீடு செல்லவும், சொந்த ஊருக்கு செல்லவும் முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த வேலை நிறுத்தத்தால் கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
 
சென்னை மட்டுமில்லாமல், தமிழகத்தின் பல பகுதிகளிலும் பேருந்து வசதி இல்லாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 
 
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசு தரும்  விலைமதிப்பிலா பரிசாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்!