Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தினகரனின் வெற்றி ஆகப்பெரிய அவமானம் - சீறும் கமல்ஹாசன்

தினகரனின் வெற்றி ஆகப்பெரிய அவமானம் - சீறும் கமல்ஹாசன்
, வியாழன், 4 ஜனவரி 2018 (13:12 IST)
ஆர்.கே.நகரில் டிடிவி தினரனின் வெற்றி கொண்டாடப்படுவது அவமானப்பட வேண்டிய ஒன்று என்கிற ரீதியில் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

 
ஜெ.வின் மறைவிற்கு பின் நடிகர் கமல்ஹாசன் அரசியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்து வந்தார். அதன்பின், தனது விஸ்வரூபம்-2 பட வேலை காரணமாக கடந்த மாதம் அரசியல் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.
 
இந்நிலையில், பிரபல வார இதழில் அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
 
அதில், ஊர் அறிந்த குற்றம் இப்படி வெளிப்படையாக நடக்க மக்களும் உடந்தையாக இருப்பது தான் எவ்வளுவு பெரிய சோகம். முதலமைச்சர் தொடங்கி சுயேட்சை வேட்பாளர் வரை வாக்காளர்களுக்கு பல ஆயிரங்கள் நிர்ணயித்து அதை கட்சிதமாக வழங்கியது ஊடகங்களில் வெளிவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், சுயேட்சை வேட்பாளரை நம்பி வாக்காளர்களே தங்களை உலை வைத்துக்கொண்டுள்ளனர். சுயேட்சையின் பதிலில் மயங்கிய சிலர் அவரின் வெற்றியின் வியூகங்களை பட்டியல் போட்டு பாராட்டி வருகின்றனர். இப்படி ஆகப்பெரிய அவமானம் தமக்கு எந்த புள்ளியில் கொண்டாட்டமாக மாறுகிறது என்பது தான் தமக்கு பிடிபடாத கேள்வி.
 
தம் வீட்டில் ஒருவருக்கு எந்த வழியிலாவது பணம் கிடைத்தால் போதும் என்ற சுயநலம் கொண்ட மக்கள் இருக்கும் வரை ஜனநாயகம் என்ற புனிதம் கேட்டு போய்விடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் கமல் - தினகரன் மோதல்: மாறி மாறி குற்றச்சாட்டு!