பொதுவாக அரசியல்வாதியாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும் வயதானவர்கள் டெக்னாலஜியை பெரும்பாலும் விரும்புவதில்லை. அப்படியே அதை உபயோகித்தாலும் ஓரளவுதான் அதில் ஈடுபடுவார்கள்
ஆனால் ரஜினிகாந்த் முழுக்க முழுக்க தனது அரசியல் பாதையை டெக்னாலஜி மூலமே வளர்க்க விரும்புகிறார். இணையதளம் மற்றும் செயலி மூலம் உறுப்பினர்கள் சேர்க்கையை ஆரம்பித்த ரஜினிகாந்த், தற்போது தனது மன்ற நிர்வாகிகள் மூலம் வாட்ஸ் அப் குரூப் மீது கவனம் செலுத்தியுள்ளார்
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக ஒரு வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்து அதற்கான அட்மின் எண்ணையும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் ரஜினியும் அவரது ரசிகர்களும் 24 மணி நேரமும் தொடர்பில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.