Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப சிதம்பரம் வீட்டில் கொள்ளை – குற்றம் சாட்டப்பட்ட பெண் தற்கொலை !

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (14:26 IST)
ப சிதம்பரம் வீட்டில் கடந்த ஆண்டு நடந்த கொள்ளை சம்பவத்தில் சம்மந்தப்பட்டதாகக் கூறப்பட்ட பார்வதி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்துக்கு சொந்தமான வீடு ஒன்று நுங்கம்பாக்கத்தில் உள்ளது. ப சிதம்பரம் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்தபோது கடந்த ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி ரூ.1.10 லட்சம் பணம், மற்றும் தங்க நகைகள், விலையுயர்ந்த பட்டுப்புடவைகள் உள்ளிட்டவை திருடு போயுள்ளது. இது சம்மந்தமாக ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமான விசாரணையில் அந்த வீட்டில் வேலை செய்த விஜயா மற்றும் வெண்ணிலா ஆகிய இருவரும் இதில் சம்மந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் பணம், நகைகளை திரும்பித் தர ஒப்புக் கொண்டதால் காவல் நிலையத்தில் அளித்த புகார் திரும்ப பெறப்பட்டது. ஆனால் இன்னமும் பணம் நகைகளைக் கொடுக்கவில்லை.

இருவரும் பணம் மற்றும் நகைகளை பாண்டி பசாரில் வசித்து வரும் பார்வதி என்பரிடம் கொடுத்திருப்பதாகப் போலீசில் கூறியுள்ளனர். வழக்கு சம்மந்தமாக விசாரிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரைப் போலிஸார் அழைத்து சென்றுள்ளனர். விசாரணை முடிந்து நள்ளிரவு அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பார்வதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments