Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றங்கரையில் ஆதார் அட்டைகள் – இதுதான் உங்கள் பாதுகாப்பா ?

Webdunia
வெள்ளி, 17 மே 2019 (09:19 IST)
திருவாரூர் மாவட்டம் அருகேயுள்ள ஆற்றங்கரையில் 3000க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் கிடந்ததை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய அரசு அனைத்து இந்திய மக்களுக்குமான அடையாள அட்டையாக ஆதார் கார்டை வழங்கி வருகிறது. எல்லாவிதமான பரிவர்த்தணைகளுக்கும் அரசு செயல்பாடுகளுக்கும் ஆதாரைக் கட்டாயமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்குப் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆதாரின் மூலம் தனிமனிதனின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் மத்திய அரசு ஆதார் விவரங்கள் 10 செ.மீ அளவுள்ள அறை சுவர்களில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் 3000 க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் கிடந்துள்ளன. இந்த கார்டுகள் அனைத்தும் அந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவர்களுடையது எனத் தெரிகிறது. இதனையடுத்து போலிஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் சுரங்கப்பாதைகளில் இருக்கும் நீரை அகற்றும் பணிகள் தீவிரம்…!

கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்… இனி மழை எப்படி இருக்கும்?

நள்ளிரவில் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்… கொட்டித் தீர்த்த மழை!

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments