Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’சிறையிலிருந்தே அரசியல் காய் நகர்த்தும் சசிகலா? நோக்கம் என்ன ?

’சிறையிலிருந்தே அரசியல் காய் நகர்த்தும் சசிகலா?  நோக்கம் என்ன ?
, வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (17:08 IST)
தமிழகத்தில் இருபெரும் திராவிட கட்சிகளுடன் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டன. இவ்விரு கட்சிகளுக்கு மாற்றாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தினகரன் தொடங்கினார். அதேபோல கமல் போன்றவர்களும் கட்சியைத் தொடங்கினர். ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் தமிழகத்தில் தலைமை வெற்றிடமாக உள்ளது என காரணம் கூறினர்.
இதனையடுத்து தினகரன் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற முயன்றார் இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி அதிமுகவுக்கே இரட்டை இலை உறுதியானது.
 
 
இந்நிலையில் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட தினகரன் கட்சிக்கு அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம். பரிசுப் பெட்டியை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய அன்றே அமோகமாக தங்கள் கட்சியை பிரபலப்படுத்தி டிவிட்டரிலும் டிரண்டாக்கினர்.
webdunia
நேற்று தேர்தல் முடிவடைந்ததை அடுத்து இன்று தினகரன் தனது அமமுக( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ) என்பதை அசியல் கட்சியாக இன்னும் ஒரு வாரத்தில் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாகதவும் தகவல் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில் அமமுகவில் துணைபொதுச்செயலாளராக தினகரன் பதிவு வகித்த நிலையில் தற்பொழுது அவர் சசிகலாவுக்கு பதிலாக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். 
 
அவரது உறவினரான சசிகலா பெங்களூரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது தினகரனை அம்மா முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக்கியது ஏன் என்று தங்க தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
 
தற்போதைய பொதுசெயலாளர் சசிகலா அனுமதியின் பேரிலேயே பொறுப்புகள் மாற்றம் மாற்றம் நடைபெறுகிறது.சசிகலாவின் ஆலோசனையின் பேரில்தான் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம்.
 
’’அமமுகவை கட்சியாக பதிவு செய்யவுள்ளதால் தினகரனை பொதுச்செயலாளராக தேர்வு செய்தொம் என்று தெரிவித்தார். 
 
மேலும் உச்ச நீதிமன்றத்தில் அமமுகவை கட்சியாக பதிவு செய்யக் கூறினார்கள். அதன் அடிப்படையில் அமமுவின் பொதுச்செயலாளராலை தேர்வு செய்யவே தினகரனை பொதுச்செயலாளராக தேர்வு செய்தோம். அமமுகவின் துணைப்பொதுச்செயலாளர் தேர்வு விரைவில் நடைபெறும் .
 
சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, அவர்தான் அமமுகவின் தலைவராக இருப்பார். மேலும் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது’’  இவ்வாறு அவர்  தெரிவித்தார்.
webdunia
வரும் 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுகவை வெற்றி பெறச்செய்யத்தான்  பல்வேறு விதமான ஆலோசனைகளை பெங்களூர் சிறையிலுள்ள சசிகலாவிடம் கேட்டு அதன்படி பல அதிரடிநடவடிக்கைகளை  தினகரன்  தன் கட்சியில் எடுத்துவருகிறாரோ ? என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்ச்சைக்குரிய கருத்து: பெண் சாமியாருக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் கண்டனம்