Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உச்ச நீதிமன்றத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு

உச்ச நீதிமன்றத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு
, செவ்வாய், 7 மே 2019 (11:59 IST)
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் அளித்த பாலியல் புகாரை தள்ளுபடி செய்து நீதிபதி பாப்டே தலைமையிலான சிறப்பு குழு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்த விசாரணை நடைமுறையை கண்டித்து இன்று உச்ச நீதிமன்றத்தில்  சில வழக்கறிஞர்கள், மகளிர் அமைப்புகள் போரட்டம் நடத்திவந்ததை அடுத்து தற்போது அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். இது இந்திய அளவில் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இதனையடுத்து தன் மீதான பாலியல் புகாரை  விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்திருந்தார் ரஞ்சன்  கோகாய்.
 
இந்தக் குழுவில் நீதிபதி பாப்டே தலைமையிலான குழுவில் இந்திரா பானர்ஜி, இந்து மஸ்கோத்ரா இடம்பெற்றிருந்தனர்.
 
இதில் பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் எந்த ஆதாரங்களும் இல்லை என்று நீதிமன்றகுழு தெரிவித்தது.
 
இந்த விசாரணைக்குழுவில் இருந்த நீதிபதிகள் கூறியதாவது :
 
உள் விசாரணைக்குழு நடத்திய விசாரணையின் விவரங்கள் பொதுவெளியில் வெளியாகாது.தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரில் எந்த ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்ததுடன் பெண் அளித்த பாலியல் புகாரை தள்ளுபடி செய்து நீதிபதி பாப்டே தலைமையிலான சிறப்புக்குழு உத்தரவிட்டது.
 
இந்நிலையில் தற்போது தலைமை நீதிபதி தொடர்பான வழக்கில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில வழக்கறிஞர்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள் உச்சந் நீதிமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
கோகாய் மீதான் பாலியல் புகாரை தள்ளுபடி செய்ததற்கும் , விசாரணை நடைமுறையை கண்டித்தும் எதிரான சிலர் போராட உள்ளாதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
எனவே பாதுகாப்பு நலன் கருதி டெல்லியில் உச்ச நீதிமன்றத்தைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடை உத்தரவு பிரபுவுக்கும் பொருந்தும்: பேரவை செயலகம்