Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆதாரை காணலையா? டூப்ளிகேட் ஆதாரை எப்படி பெறுவது? தெரிந்துக்கொள்ளுங்கள்...

Advertiesment
ஆதாரை காணலையா? டூப்ளிகேட் ஆதாரை எப்படி பெறுவது? தெரிந்துக்கொள்ளுங்கள்...
, சனி, 20 ஏப்ரல் 2019 (11:00 IST)
ஆதார் அனைத்திற்கும் அவசியமான ஒன்றாக உள்ளது. அபப்டிப்பட்ட ஆதாரை தொலைத்துவிட்டால், அது குறித்து கவலைப்படாமல், டூப்ளிகேட் ஆதாரை எப்படி பெறுவது என தெரிந்துக்கொள்ளுங்கள்...
 
1. https://resident.uidai.gov.in/find-uid-eid என்கிற லிங்கை பயன்படுத்தி முகப்புப் பக்கத்திலேயே தொலைந்த ஈஐடி/யுஐடி மீட்டெடுப்பதற்கான தேர்வை காணலாம். 
 
2. தேர்வின் படி ஆதார் எண் (யுஐடி) அல்லது பதிவு எண் (ஈஐடி) தேர்ந்தெடுக்கவும். பின்னர் முழுப்பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை அதில் பதிவிடவும். 
 
3. பின்னர் ஓடிபி கேட்டு, அதை பதிவிடவும். அவ்வாறு செய்தவுடன் மொபைலில் ஆதார் அட்டை எண் அல்லது பதிவு அடையாளத்துடன் ஒரு எஸ்.எம்.எஸ் வரும். 
 
4. பின்னர் https://eaadhaar.uidai.gov.in/ என்கிற இந்த லிங்கை பயன்படுத்தி, ஐ ஹேவ் என்பதன் கீழ் தலைப்பின் கீழ் பதிவு எண் அல்லது ஆதார் எண் என்பதில் பொருத்தமான ஒன்றை தேர்வு செய்யவும்.
 
5. பிறகு ஆதார் எண் அல்லது பதிவு எண்ணை உள்ளிடவும். பின்னர் மீண்டும், முழுப்பெயர், அஞ்சல் குறியீடு, பாதுகாப்பு எழுத்துக்கள், மொபைல் எண் ஆகியவற்றைக் கொடுத்து பிறகு ஓடிபி பெறவும். 
 
6. ஓடிபியை பெற்றதும் அதை பதிவிட்டு, சரிபார்த்து மதிப்பிடுக மற்றும் பதிவிறக்கம் செய்க என்ற தேர்வை கிளிக் செய்து நகல் ஆதாரை பதிவிரக்கம் செய்துக்கொள்ளவும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருமான வரி செலுத்தவில்லை என்றால் என்னவாகும்?