Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சண்டையை தடுக்க சென்ற தந்தை திடீர் மரணம்; பதறிப்போன மகன்

Advertiesment
சண்டையை தடுக்க சென்ற தந்தை திடீர் மரணம்; பதறிப்போன மகன்
, வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (15:38 IST)
திருவரூர் மாவட்டத்தில் சண்டைப் போட்டுக்கொண்டிருந்தவர்களை தடுக்கச் சென்ற தந்தை மயங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

 
திருவாரூர் மாவட்டம், காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இராமையன்(70).  இவரது மகன் இளையராஜா(3) ஆசைத்தம்பி (37) என்பவருடன் சண்டைபோட்டுக் கொண்டனர். இதைக்கண்ட இராமையன் இருவரையும் தடுத்த நிறுத்த முயன்றார். 
 
இராமையனை சண்டை போட்டுக்கொண்டிருந்த இருவரும் கீழே தள்ளிவிட்டனர். இதனால் இராமையனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்து கீழே விழுந்தார். 
 
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் இராமையன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
சண்டையை சமாதானப்படுத்த முயன்ற தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனி மொழி: வினோத ஆப்பிரிக்க பழங்குடியினர்