Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரப்பதிவு துறையில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (19:27 IST)
தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் பத்திரப்பதிவு துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
பத்திரப்பதிவு துறையில் நடந்த முறைகேடுகளை விசாரணை செய்ய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
பத்திரப் பதிவுத் துறையில் ஆள்மாறாட்டம் போலி ஆவணங்கள் மூலம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் நிலமோசடி வருவாய் அரசுக்கு வருவாய் இழப்பு அரசு நில ஆக்கிரமிப்பு உள்பட பல்வேறு புகார்கள் குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த குழு 3 ஆண்டுகள் செயல்படும் என்றும் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இந்த குழுவினர் ஆய்வறிக்கையை அரசுக்கு சமர்ப்பிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் வரும்காலத்தில் பத்திரப்பதிவு துறையில் மோசடியை தவிர்க்க வழிமுறைகளையும் இந்த குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மழை: மின்சாரம் தாக்கி ரஜினியின் ‘லால் சலாம்’ பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி!

கரையைக் கடந்த போதும் ஒரே இடத்தில் நகராமல் நிற்கும் ஃபெஞ்சல் புயல்… வானிலை மையம் தகவல்!

2900 மோட்டார்கள் பொருத்தி வெள்ளத்தை வடிக்கும் பணிகள்… அமைச்சர் தகவல்!

புயல் கரையைக் கடந்த நிலையில் மீண்டும் தொடங்கிய சென்னை விமானப் போக்குவரத்து!

கன மழையால் 20 அடியாக உயர்ந்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்…!

அடுத்த கட்டுரையில்
Show comments