நேற்று நடைபெற்ற விசிக மகளிர் மாநாட்டில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியபோது, ‘மசூதி, சர்ச் குறித்து ஒருவுதமாகவும், கோவில் குறித்து ஒருவிதமாகவும் பேசினார்.
அவரது கோவில் குறித்த பேச்சுக்கு இந்து அமைப்புகள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன. பல அரசியல் தலைவர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில் அதன்பின் திருமாவளவன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கையை பதிவு செய்தார்.
இந்த நிலையில் திருமாவளவன் மீது இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் போலீஸ் புகார் அளித்துள்ளனர். இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘விசிக மாநாட்டில் இந்து கோயில்களை இழிவுப்படுத்தி பேசியதாகவும், திருமாவளவன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரை பெற்றுக்கொண்ட ஓதியஞ்சோலை போலீசாரின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்