Publish Date: Tue, 12 Nov 2019 (18:19 IST)
Updated Date: Tue, 12 Nov 2019 (18:27 IST)
நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
இன்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம், நடிகர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவருக்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாதால் அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு வயதாகி விட்டது என தெரிவித்தார்.
இந்நிலையில், விசிக கட்சித் தலைவர் தொல். திருமாவளன் இதுகுறித்து கூறியுள்ளதாவது :
தமிழ்நாட்டு மக்களின் பார்வை மாறி இருக்கிறது. நடிகர்களை நடிகர்களாகவே பார்க்கிறார்கள். ஆனால், வயது மூப்பிம் அடிப்படையில் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. எம்.ஜி.ஆர். மக்களிடன் ஏற்படுத்திய தாக்கத்தை இப்போதைய நடிகர்களால் ஏற்படுத்த முடியாது.
மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளன் தெரிவித்துள்ளார்.