கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக துணைத் தலைவர் விபி துரைசாமி அவர்கள் திடீரென பாஜக தலைமையில் மட்டுமே கூட்டணி என்றும் பாஜக கொள்கையுடன் கொள்கையை ஒப்புக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்றும் அறிவித்திருந்தார். விபி துரைசாமி அவர்களின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாஜக தலைவர்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் பாஜக தலைமையில் புதிய கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
ஏற்கனவே அதிமுக, திமுக கூட்டணியில் இருந்து ஒருசில கட்சிகள் கழட்டி விடப்படும் சூழ்நிலை உள்ளதால் தற்போது பாஜக தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் என்றும் அந்த அணியில் பாமக, தேமுதிக, மதிமுக, தினகரன் கட்சி, சரத்குமார் கட்சி, வாசன் கட்சி ஆகியவை இணையலாம் என்று கூறப்படுகிறது
மேலும் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக முதல் கட்சியாக வெளியேறும் வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக கூட்டணியில் அக்கட்சி முதல் கட்சியாக இணையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது