Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் 161 நாட்களுக்குப்பின் ஓடிய பேருந்துகள்: பயணிகளுக்கு என்னென்ன கட்டுப்பாடு?

சென்னையில் 161 நாட்களுக்குப்பின் ஓடிய பேருந்துகள்: பயணிகளுக்கு என்னென்ன கட்டுப்பாடு?
, செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (07:13 IST)
சென்னையில் 161 நாட்களுக்குப்பின் ஓடிய பேருந்துகள்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது தெரிந்தது. அந்த வகையில் இன்று காலை முதல் சென்னையில் மாநகரப் பேருந்துகள் ஓடத் துவங்கி உள்ளன
 
சென்னையில் மட்டும் என்று 3300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 20,000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பேருந்தில் 24 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும், ஒரு இருக்கைக்கு ஒருவர் மட்டுமே அமர வேண்டும் என்றும் நின்று கொண்டு, படிகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூர் வரையிலும் ஜிஎஸ்டி சாலையில் கூடுவாஞ்சேரி வரையிலு,ம் கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் வரையிலும், பூந்தமல்லி சாலையில் திருமழிசை வரையிலும், செங்குன்றம் சாலையில் பாடி வரையிலும் பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
சென்னையிலிருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களுக்கு பேருந்து இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக கொரோனா பாதிப்பு 2.56 கோடி, பலி 8.54 லட்சம்: பரபரப்பு தகவல்