Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Advertiesment
தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி  மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

J.Durai

, வெள்ளி, 17 மே 2024 (18:08 IST)
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த இளைஞரை மீட்ட சார்பு ஆய்வாளர் சிகிச்சைக்காக  மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இளையான்குடியை அடுத்துள்ள சாலைகிராமம் வடக்குவலசை பகுதியை சேர்ந்தவர் ராமு மகன் சுரேஷ். இவர் தந்தை ஓட்டுநராக பணிபுரிந்து உயிரிழந்து விட்டார். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சுரேஷ்க்கு மன அழுத்தம் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனை ஊழியர்களிடம் தனக்கு  மருந்து கொடுத்து தன்னை கொன்று விடுமாறு தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகின்றது.  இந்நிலையில் சாலைகிராம காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரியும் பிரேம் குமார் இது குறித்து தகவல் அறிந்த நிலையில் அவரை தன்னுடைய சொந்த முயற்சியால் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மனநல பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தார். 
 
இந்த சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு