Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாழம்பூ என்ற பெயரில் குலுக்கல் சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பண வசூல் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினரிடம் புகார் மனு!

Advertiesment
தாழம்பூ என்ற பெயரில் குலுக்கல் சீட்டு நடத்தி கோடிக்கணக்கில்  பண வசூல் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினரிடம் புகார் மனு!

J.Durai

சிவகங்கை , செவ்வாய், 7 மே 2024 (07:38 IST)
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் சலூன் கடை நடத்தி வந்தவர் காலை ராஜன். இவரது மனைவி மைதிலி.
 
இந்நிலையில்,சலூனில் முடி திருத்தம் செய்ய சென்ற அதே ஊரைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் குலுக்கள் சீட்டு நடத்துவதாகவும்,அதில் சேர்ந்தால், குறைந்த பணத்தில் இருசக்கர வாகனங்கள் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறிய காலை ராஜனும், அவரது மனைவி மைதிலியும் பிரபுவையும்,பிரபுவின் மூலமாக அவருக்குத் தெரிந்தவர்களையும் ஆயிரத்துக்கு மேற்பட்டோரை குலுக்கல் சீட்டில் சேர்த்துள்ளனர்.
 
ஒவ்வொருவரும் தலா 15 ஆயிரம் ரூபாய் கட்டிய நிலையில்,குலுக்கல் நடத்தாமல், பணத்தை மோசடி செய்து,காலைராஜனும் அவரது மனைவியும் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டதாக  ஏமாற்றப்பட்டவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
 
குலுக்கல் சீட்டு நடத்தி பலரிடம்  கோடி கணக்கில்   பணம் வசூலித்து மோசடி செய்த சம்பவம் நாட்டரசன் கோட்டை மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யானைகளின் பெயரை கூறி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் வனத்துறை -விவசாயிகள் கண்டனம்!