Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு கோடை கால நீச்சல் பயிற்சி!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு கோடை கால நீச்சல் பயிற்சி!

J.Durai

சிவகங்கை , வியாழன், 25 ஏப்ரல் 2024 (22:37 IST)
கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிப்பதற்காகவும் தங்களின் தற்காப்பு மற்றும் திறமையை வெளிக்கொணரும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கோடை காலங்களில் பல்வேறு விளையாட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 
 
இதன் ஒரு பகுதியாக கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு சிவகங்கை திறந்தவெளி விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.  
 
காலை, மாலை என இரு வேளைகளில் திறமையான பயிற்றுநர்களைக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 
 
இரண்டு மாத காலங்களில் 4 பிரிவுகளாக வழங்கப்படும் பயிற்சியில் ஒவ்வொரு பிரிவிலும் 12 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் நீச்சல் பயிற்சிக்கான சான்றிதழும் வழங்கப்படுகிறது. இதில் திறமையான நீச்சல் வீரர்களை கண்டறிந்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிறந்த நீச்சல் வீரர்களாக மேம்படுத்தும் விதமாக சிறந்த வல்லுனர்களைக் கொண்டு பயிற்சி அளித்து மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினையும் ஏற்படுத்தித் தருகின்றனர்.
 
தற்போது கோடை காலத்தில் பயனுள்ள  நீச்சல் பயிற்சியினை 52 மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் கற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

250வது மேட்ச்.. 207 ரன்கள் டார்கெட் வைத்த ஆர்சிபி! – இறங்கி அடிக்குமா சன்ரைசர்ஸ்?