ஊரே அடங்குனாலும் அம்மா உணவகத்துக்கு நோ ரெஸ்ட்!!

சனி, 21 மார்ச் 2020 (11:46 IST)
நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்துள்ளார். 
 
நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் நாளை ஊரடங்கை செயல்படுத்துமாறு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை ஏற்று தமிழகம் முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளது. 
 
அரசு சார்ப்பில் தமிழகத்தில் பேருந்து, ரயில் சேவைகள், மெட்ரோ நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்கமும் கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. பால் விநியோகிஸ்தர்களும், கோயம்பேட் சந்தை சங்கமும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க உள்ளது. டாஸ்மாக் கடைகளும் நாளை மூடப்படும். 
 
ஆனால், சென்னையில் நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் பொதுமக்கள் நலன் கருதி அம்மா உணவகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மீண்டும் ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை!!