Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்....தீவிரவாதிகள் இருவர் பலி...

Advertiesment
ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்....தீவிரவாதிகள் இருவர் பலி...
, வியாழன், 27 செப்டம்பர் 2018 (20:32 IST)
ஸ்ரீநகரில்  அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள தூரு சாகாபாத் பகுதியில் இந்திய ராணுவம் தீவிரவாதிகளுடன் தாக்குதல் நடத்தியது. இதில்  இரண்டு பேரை உயிருடன் பிடித்துள்ளனர்.
இன்று அதிகாலை முதலே பலகட்டமாக நடந்த தாக்குதலில்  3 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 
 
பின்பு ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதலை நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மற்ற சிலர்   அங்கிருந்து தப்பி ஓடினார். இந்நிலையில் அருகே இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த 3 பாதுகாப்பு  வீரர்களில் ஒருவர் மாத்திரம் சிகிச்சை பலனளிக்காமல் வீரமரணமடைந்தார்.
 
அதன் பிறகு தலைநகர் ஸ்ரீநகரில் நூர்பாக் என்கிற இடத்தில் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் ராணுவவீரர்கள்  ஈடுபட்டிருந்த போது  மசூதயில் மறைந்திருந்த தீவிரவாதைகளை பாதுகாப்பு படையினர்  நெருங்கியதும் இரு தரப்புக்கும் இடையே மாறி,மாறி நடந்த துப்பாக்கி  சூட்டுக் கொண்டனர். பிறகு ராணுவத்தினர் குறிவைத்து தாக்கியதில்  2 பயங்கரவாதிகள் இறந்தனர்.
 
தீவிரவாதிகளுக்கு அதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய இந்த அதிரடி தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்த பகுதி முழுதும் தற்காலிகமாக இணைய சேவைகள்  தடைசெய்யப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட கொடுமையே? 30 பெண்களை கொன்று ஊறுகாய் போட்ட பெண்