கர்நாடகாவில் கலப்பு திருமணம் செய்துக்கொண்ட தம்பதியினரை 13 ஆண்டுகல் கழித்து அடித்து கொன்ற சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்நாடகவின் முலகுந்தாவை சேர்ந்தவர் அஷ்ரப் அலி. அருகில் உள்ள பசாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சோமவ்வா. இருவரும் காதலித்து வந்தனர். ஆனால், இவர்கள் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதனால் வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறி இவர்கள் திருமணம் செய்துக்கொண்டு மங்களூருவில் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் பண்டிகைக்காக கணவரின் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். அப்போது மனைவி தனது உறவினர்களை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டதால், பசாபுராவிற்கு சென்றுள்ளனர்.
ஆனால், வீட்டிற்கு செல்லும் முன்னர் சோமவ்வாவின் சகோதரர் தேவப்பா அவர்களை வழிமறித்தார். மேலும், 13 ஆண்டுகள் பகையை தீர்க்க முடிவு செய்து இருவரையும் இரும்பு கம்பியால் அடித்தே கொன்றுள்ளார்.
பின்னர், தேவப்பா, கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு கம்பியோடு சென்று காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.