நண்பர்களுடன் சேர்ந்து மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை !

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (21:46 IST)
திண்டுக்கல் மாவட்டத்தில் தன் நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற பெண் குழந்தையையே பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம்  நாகல் நகரில் வசித்து வருபவர் லிங்கமூர்த்தி(47). இவர் அப்பகுதியில் சமையல் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார்.

லிங்கமூர்த்தி தனியாக வசித்து வந்ததால், இவர் வேலைக்குச் செல்லும்போது,  தன் மகளை நண்பர் கண்ணனிடம் விட்டுவிட்டுச்சென்றுள்ளார்.

இந்த நிலையில், குடிபோதையில், வீட்டிற்கு வந்த லிங்கமூர்த்தி, தன் நண்பர் கண்ணனுடன் சேர்ந்து, 12 வயது மகளை பாலியல் வன் கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து, அரிசிக் கடை  நடத்தி வரும் முகமதுரபிக் என்பவரும் சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார்.

சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்ட  நிலையில், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர், அவரைப் பரிசோதித்த மருத்துவர், குழ்ந்தை கர்ப்பமாக இருப்பதைக் கண்டுபிடித்து, குழந்தைகள் நல அலுவலருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில். தந்தை லிங்கமூர்த்தி உள்ளிட்ட 3 பேரும் கைது போக்சோவில் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்?

புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

திடீரென டெல்லி சென்ற ஓபிஎஸ்.. பாஜக தலைவர்கள் சந்திப்பா? தேர்தல் ஆணையத்திற்கு செல்கிறாரா?

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்