Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யை பார்க்க ஓடி வந்த ரசிகர்; துப்பாக்கியை காட்டி மிரட்டிய பாதுகாவலர்?? - என்ன நடந்தது?

Advertiesment
Vijay Fan Gun Threat

Prasanth Karthick

, செவ்வாய், 6 மே 2025 (08:41 IST)

நேற்று மதுரை விமான நிலையத்தில் விஜய்யை காண வந்த ரசிகரை பாதுகாவலர்கள் துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், தனது கடைசி படமான ஜனநாயகனில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்கான சில காட்சிகள் கொடைக்கானலில் படமாக்கப்பட்ட நிலையில் அங்கு சென்று 5 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய், அங்கிருந்து நேற்று மதுரை விமான நிலையம் வந்து அங்கிருந்து சென்னை சென்றடைந்தார்.

 

அந்த சமயம் மதுரை விமான நிலையத்தில் விஜய்யை காண பலரும் வந்த நிலையில் ஒருவர் விஜய்யை நெருங்க முயன்றபோது அவரை பாதுகாவலர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து அப்புறப்படுத்தியதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

 

விஜய்யை பார்க்க வந்த அந்த நபர் விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் இன்பராஜ் ஆவார். அவர் பேசும்போது, மதுரையில் விஜய்க்கு முதலில் மன்றம் தொடங்கியது நான் தான் என்றும், விஜய்யை சந்திக்க சென்றபோது பாதுகாவலர்கள் தடுத்ததாகவும், ஆனால் அவர் கையில் துப்பாக்கி இருந்ததை தான் பார்க்கவில்லை என்றும், அதை காட்டி அவர்கள் மிரட்டவில்லை என்றும் கூறியுள்ளார். 

 

பாதுகாவலர் துப்பாக்கியை எடுத்ததும், இன்பராஜ் உள்ளே நுழைந்ததும் ஒரே சமயத்தில் நடந்ததால் அது தவறாக சித்தரிக்கப்படுவதாக தவெகவினர் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிந்து நதிநீரை நிறுத்தினால்.. அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் தயார்..? - பாகிஸ்தான் மிரட்டல்!