Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகம், சென்னையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? அதிர்ச்சி தகவல்

தமிழகம், சென்னையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? அதிர்ச்சி தகவல்
, புதன், 20 மே 2020 (18:59 IST)
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இன்று தமிழகத்தில் 743 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 13191ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 743 பேர்களில் சென்னையில் மட்டும் 557 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8228ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 3 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 87ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 987 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 5882 என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று தமிழகத்தில் 11441 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் 343,793 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ப்பிணிகளையும், மாற்றுத்திறனாளிகளையும் வேலைக்கு அழைக்க வேண்டாம் !