Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10 மாதம் சம்பளம் வழங்கவில்லை... பொதுப்பணித்துறை ஊழியர்கள் தர்ணா போரட்டம்!

10 மாதம்  சம்பளம்  வழங்கவில்லை... பொதுப்பணித்துறை ஊழியர்கள்  தர்ணா போரட்டம்!
, புதன், 20 மே 2020 (18:32 IST)
புதுச்சேரியைச் சேர்ந்த பொதுப்பணித்துறையில் பணியாற்றிவரும் தினக் கூலித் தொழிலாளர்கள்  நிலுவையில் உள்ள சம்பளத்தைக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறையில் 1311 தினக்கூலி பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10  மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதால் சம்பளத்தை வழங்கக் கோரி தலைமைப் பொறியாளர் அலுவலக ஊழியர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் புதுச்சேரி சட்டமன்றம் நோக்கி ஊர்வலமாக வந்தனர் அவர்களை போலீஸார் சட்டமன்றத்திற்கு முன்பாகவே தடுத்தி நிறுத்தினர். அதனால், பணியாளர்கள் சாலையில் அமர்ந்து 10 மாத சம்பளத்தை தர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் போலீஸார் அனைவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மொட்டை மாடிக்கு சென்ற இரட்டை சகோதரிகள் தூக்கில் தொங்கி தற்கொலை: பெரும் பரபரப்பு