நேற்று நடந்து முடிந்த வேலூர் மக்களவைத் தேர்தலில் 72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
பணப்பட்டுவாடாக் காரணமாக வேலூரில் ரத்து செய்யப்பட்ட தேர்தல் அறிவிக்கப்பட்ட படி ஆகஸ்ட் 5ஆம் தேதி நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பில் ஏசி சண்முகம் அவர்களும், திமுக அதிமுக சார்பில் கதிர் ஆனந்த் அவர்களும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி அவர்களும் மற்றும் பல சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
வேலை நாளில் இந்த வாக்குப்பதிவு நடந்தாலும் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 1,553 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்குப் பதிவில் 72 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். பெரிய அசம்பாவிதங்கள் நடக்காமல் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடக்க இருக்கிறது.