Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேலூர் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது ...

Advertiesment
வேலூர் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது ...
, திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (19:21 IST)
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது வேலூர் தொகுதியில் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வேலூர் தொகுதியில் அதிக பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைத்தது
இந்த நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூரில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை அடுத்து சற்றுமுன் வேலூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பில் ஏசி சண்முகம் அவர்களும், திமுக அதிமுக சார்பில் கதிர் ஆனந்த் அவர்களும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி அவர்களும் மற்றும் பல சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்
 
வேலூர், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, அணைக்கட்டு, ஆரணி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் அடங்கிய வேலூர் மக்களவைத் தேர்தலில் சுமார் 14.32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் கடந்த சில நாட்களாக அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக திமுக, அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வந்தனர்
 
இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையடுத்து வேலூர் தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலின் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் இன்று மாலை 5 மணிவரை 63% வாக்குகள் பதிவாகியிருந்தன.  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.  6 மணிக்கு முன்னதாக வந்து வரிசையில்  நின்றிருப்போருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதில் காலையில் மந்தமாக இருந்த வாக்களிப்பு மதியத்திற்குப் பின் வேகமானது. 
 
வரும் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாய்க்காலில் கவிழ்ந்த டேங்கர் லாரி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்