தமிழக முதல்வரின் தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் என்பவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த புகாரை அடுத்து திமுக எம்பி கனிமொழி, திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கடும் விமர்சனங்களை செய்த நிலையில் தற்போது தமிழக அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்து உள்ளது
ஏற்கனவே இந்த புகார் குறித்து விசாரணை செய்ய ஏற்கனவே குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது பாலியல் புகாருக்கு உள்ளான சிறப்பு பிஜேபி ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நேரத்தில் அரசின் மீது எந்த குற்றச்சாட்டும் இருந்து விடக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது