Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாமான்யனின் குரல்!! ஹிந்தியை திணிக்கும் அமித்ஷாவின் செவிகளுக்கு எட்டுமா?

சாமான்யனின் குரல்!! ஹிந்தியை திணிக்கும் அமித்ஷாவின் செவிகளுக்கு எட்டுமா?
, செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (11:26 IST)
(பின்வரும் கட்டுரையில் உள்ள கேள்விகள் தனிபரின் (இரா காஜா பந்தா நவாஸ்) கருத்தே, வெப்துனியாவின் கருத்தள்ள.) 
 
இந்திராவே இந்தியா! இந்தியாவே இந்திரா! என்ற காங்கிரஸ்காரர்களின் அகங்காரத்தைப் போல ஹிந்தியே இந்தியா! இந்தியாவே ஹிந்தி என்கிறார் அமித்ஷா.
 
இது அமித்ஷாவின் ஹிந்தி மொழி மீதான பாசம் அல்ல. மாறாக அது ஒரு மொழி வன்மம். மாநிலங்கள் மீதான ஹிந்தித் திணிப்பு. பிஜேபியின் தேர்தல் விற்பன்னர். 
 
சென்ற இடம் எல்லாம் வியூகங்கள் வகுத்து வெற்றிகளைக் குவித்தவர் அமித்ஷா. ஆனால் அவர் தற்போது ஆட ஆசைப்படும் மொழி விளையாட்டு ஆபத்தானது. அதன் ஆடுக்களம் மக்களின்/மாநிலக்களின் உணர்வுகள்.
 
மிஸ்டர். அமித்ஷா உங்களுக்கு நான் ஆறு கேள்விக்களை முன் வைக்கிறேன்.
 
கேள்வி 1:
கலை இல்லாத ஒரு மொழியை!
காவியங்கள் இல்லாத ஒரு மொழியை !
அறிவியல் இல்லாத ஒரு மொழியை !
எப்படி ஒட்டு மொத்த இந்தியாவின் ஒரு மொழியாக முன் நிறுத்த முடியும்?
 
கேள்வி 2 :
மக்கள் என்ன சாப்பிட வேண்டும்? என்ன மொழிப் பேச வேண்டும்? எந்த மொழியை முன் நிறுத்த வேண்டும் என்பதை எல்லாம் சொல்ல நீங்கள் யார்? இந்தியாவை ஹிந்தியைக் கொண்டு முன் நிறுத்த, அடையாளப்படுத்த வேண்டும் என்று சொல்ல நீங்கள் தகுதியான நபர் தானா?
 
கேள்வி 3:
பசு, ராம ஜென்ம பூமி, பாகிஸ்தான், ஹிந்தியைத் தவிர்த்து மக்கள் நலன் பற்றியும் கொஞ்சம் பேசுங்கள் அமித்ஷா. வீழ்ந்து வரும் நாட்டின் பொருளாதாரம் பற்றி எப்போது பேசுவீர்கள் அமித்ஷா?
 
கேள்வி 4:
மக்களைத் துண்டாடி வெற்றிப் பெற இது குஜராத் அல்ல. ஹிந்திப் பேசும் மாநில மக்களைத் திருப்திப்படுத்த என்ன வேண்டும் ஆனாலும் பேசுவீர்கள் போல அமித்ஷா?
 
கேள்வி 5:
தேனீர் கோப்பைக்குள் ஒளிந்திருக்கும் ரத்தம்ப்போல உங்கள் பேச்சின் பின்புறம் மாநிலங்களைத் துண்டாடக் கூடிய மொழி வெறி ஒழிந்து இருக்கிறது அமித்ஷா. மாநில மக்களின் நெஞ்சில் விழுந்த நெருப்பைப் போல இருந்தது உங்களின் பேச்சு. இது நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகா அமித்ஷா?
 
கேள்வி 6:
ஹிந்தியைக் கொண்டு மாநிலங்களைத் தாக்கும் ஒவ்வரு முறையும் மாநிலங்கள் பலம் பெறுகிறது. மக்கள் கிளர்ந்து எழுகிறார்கள். இந்தியா என்பது ஹிந்தி தேசம் மக்களின் தேசம் மட்டும் அல்ல. அதில் அனைத்து மொழிகளுக்கும் சம பங்கு உண்டு. 
 
இறுதியாக இந்தியாவை முன் நிலைப்படுத்த ஹிந்தி தேவை இல்லை. இன்னும் ஒரு மொழிப்போரை எதிர்க்கொள்ள தயாராக இருக்கிறீர்களா? 
 
அண்ணா இறந்துவிட வில்லை. லட்சக்கணக்கான அண்ணாக்கள் களத்தில் இருக்கிறார்கள். களம் காண நாங்கள் தயார் ! களத்தை எதிர்க்கொள்ள நீங்கள் தயாரா ? 
 
இறுதியாக !
எனது தாய் மொழி உங்கள் அரசின் அடித்தளத்தை ஆட்டம் காண வைக்கிறது என்றால் உங்கள் அரசை எமது நிலத்தில் அமைத்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம் - முசா அந்தர்

 (இரா காஜா பந்தா நவாஸ்)
webdunia

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிக்குமா??