Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 28 April 2025
webdunia

கயவன் கமல் : ஊளையிடும் ஸ்டாலின் .. ஹிந்தி எதிர்ப்புக்கு பதிலடி கொடுத்த சுப்பிரமணிய சுவாமி

Advertiesment
subramaniya swamy
, திங்கள், 16 செப்டம்பர் 2019 (19:10 IST)
ஹிந்திக்கு எதிராக கயவன் கமல்ஹாசன் மற்றும் ஸ்டாலினும் ஊளையிட்டுக் கொண்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அன்று நாடு முழுவதும் ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது டிவிட்டர் பக்கத்தில், ”இந்தியா வெவ்வேறு மொழி கொண்ட நாடாக இருந்தாலும், ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பது தான் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும். ஆதலால் மக்கள் தங்கள் தாய் மொழிகளுடன் ஹிந்தியையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.இதற்கு நாடு முழுவதிலும் இருந்து எதிர்ப்புக் குரல் எழுந்தது, அமித் ஷாவின் பேச்சைக் கண்டித்து டுவிட்டரிலும் அதை டிரெண்டாக்கினர்.
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தக் கருத்துக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் , மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பலவேறு தலைவர்கள் கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்தனர்.
 
இதில், திமுக தலைவர்  ஸ்டாலின் கடந்த சனிகிழமை  அன்று, அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கூறியதாவது : அமித் ஷாவின் ஒரே நாடு ஒரே மொழி என்று கூறியுள்ளது, தென்னிந்தியாவில் ஹிந்தியை திணிக்கும்  முயற்சி என தெரிவித்தார்.
 
இதனைத்தொடர்ந்து இன்று கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில்,பல ராஜாக்கள் தங்கள் ராஜ்ஜியங்களை விட்டு கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் மொழியையும் கலாச்சாரத்தையும் விட்டு கொடுக்க முடியாது என பல இந்தியர்கள் சொன்னார்கள்” என கூறுகிறார்.
 
மேலும் அந்த வீடியோவில், “எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ இந்திய கலாச்சாரத்தை திடீரென மாற்றிவிட முயற்சிக்க கூடாது எனவும், ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது சிறிய போராட்டம், எங்கள் மொழிக்காக நாங்கள் போராட் துவங்கினால் அது, அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும்” என எச்சரித்துள்ளார்.
 
”இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம், திணிக்க நினைத்தால் குமட்டிக் கொண்டு வரும் எனவும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதை குறித்து அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது டிவிட்டர் , கமல்ஹாசன் மற்றும் ஸ்டாலினை விமர்சித்து தனது பக்கத்தில் ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.
 
அதில், கயவன் கமல்ஹாசன் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஹிந்திக்கு எதிராக ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  தமிழகத்தில் ஹிந்தியை கற்பிக்கக் கூடாது என்று எதிர்க்கும் அவர்களை என்னவென்று சொல்வது ? ஹிந்தியை மூன்றாவது மொழியாகத்  தேர்வு செய்யும் வாய்ப்பை மாணவர்களிடமே கொடுக்கலாம். அதை அவர்களே தீர்மானிக்கட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சைக்கிளில் சென்ற சைக்கோ..? டிராம் வண்டியை நொறுக்கிய காரணம் என்ன ? வைரல் வீடியோ