அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் கோடை பருவம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. எனினும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி கன்னியாக்குமரி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் தமிழக பகுதிகள் மற்றும் கடற்கரை பகுதிகளிலும், வட தமிழக கடலோர பகுதிகளாக புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என கூறப்பட்ள்ளது.
இதனைத்தொடர்ந்து தற்போது அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது.