வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களே ஆகியுள்ள நிலையில் அதற்கு இயல்பை விட மழைப்பொழிவு அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. பருவமழை போல கனமழை பெய்தாலும், கணக்குப்படி பருவமழை தற்போதுதான் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் இன்று வரை வடகிழக்கு பருவமழையானது இயல்பை விட 42% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் இயல்பாக 77.1 மிமீ அளவே மழை பதிவாகும் நிலையில் இந்த ஆண்டில் 109.7 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் 24ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவாகும் நிலையில் மழைப்பொழிவு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K