தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வரும் 19-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொது தேர்வும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு இருப்பதால் இந்த இரு வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு சுமார் 40 சதவீதம் அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், குறைக்கப்பட்ட பாடத்தில் இருந்து கேள்விகள் எதுவும் வராது என்றும் ஆன்லைனில் நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன