கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து சமீபத்தில் பெற்றோர்களிடம் தமிழக அரசு கருத்து கேட்டது
இந்த கருத்துக்களின் அடிப்படையில் பள்ளி கல்வி துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் தற்போது பள்ளிகள் திறக்கும் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க 95 சதவீத பள்ளிகள் சாதகமான அறிக்கைகள் அளித்துள்ளதாகவும் இதன் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வரும் 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்
மேலும் ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை உட்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்
மேலும் அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மாணவர்களின் நலன் கருதி அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்வதாக முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்