4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை: எங்கெங்கு தெரியுமா?

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (13:48 IST)
உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு. 

 
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த மண்டலமாக மாறி இன்று கரையை கடந்தது என்பதை பார்த்தோம். இதன் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தாலும் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நவம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் தென்மாவட்டங்கள் உள் மாவட்டங்கள் ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் புதுவை காரைக்கால் பகுதியில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments