Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளிர் கல்லூரியின் 33வது விளையாட்டு விழா

Advertiesment
மகளிர் கல்லூரியின் 33வது விளையாட்டு விழா

J.Durai

Covai , செவ்வாய், 5 மார்ச் 2024 (08:47 IST)
மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள், விளையாட்டு விழாவின் அடையாளமான ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் சென்றனர்.
 
இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்ட  கமிஷனர்  வி.பாலகிருஷ்ணன்  பேசியதாவது:
 
உடல் நலமும் மனநலமும் இருந்தால்தான் வாழ்க்கையில் சாதனைகளைச் செய்ய முடியும்.
 
கல்லூரி மாணவிகள் உடல் நலத்தைப் பாதுகாப்பது அத்தியாவசியமானது என்றார். உடற்பயிற்சியோடு வாழ்க்கை முறையையும் ஒழுங்குபடுத்துவதால் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம் என்று கூறிய அவர், மாணவிகளின் பாதுகாப்புக்காகக் காவல்துறை முன்னெடுத்துள்ள முயற்சிகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
 
பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பேராசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விளையாட்டு விழாவில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாகப் பங்கேற்ற துறைக்கான பரிசை வணிகவியல் துறை பெற்றது. கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவிடம் இருந்து அழைப்பே வரவில்லை.. கடும் அப்செட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி?