கோவை மாவட்டம் வடவள்ளி- கணுவாய் சாலை காளப்பநாயக்கன் பாளையம் பகுதியில் இயங்கி வரும்  தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
	 
	இந்த மெயில் அனுப்பி மிரட்டல் விடுத்தது யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
	 
	இந்த நிலையில், இன்று கோயம்புத்தூரில் உள்ள  தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
	 
	கோவை மாவட்டம் வடவள்ளி- கணுவாய் சாலை காளப்பநாயக்கன் பாளையம் பகுதியில் இயங்கி வரும்  தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
	 
	மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் 4 பேர் மோப்ப நாய் உதவியுடன் அங்கு சென்று சோதனை செய்து வருகின்ற்னர்.
	 
	வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பள்ளிப் பேருந்துகளிலும், பெற்றோர்களின் வாகனங்களின் மூலமும் மாணவர்களை அவசரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
	 
	இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.