Publish Date: Fri, 04 May 2018 (10:36 IST)
Updated Date: Fri, 04 May 2018 (10:39 IST)
சேலத்தில் எட்டு வழிச்சாலை அமைந்தால் எட்டு பேரை வெட்டுவேன் என நடிகர் மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் போலீஸை தரக்குறைவாக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு சமீபத்தில் வெளியே வந்த நடிகர் மன்சூர் அலிகான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு சென்றார்.
சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். ஆதலால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக்கூடாது. அதையும்மீறி எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என ஆவேசமாக பேசியுள்ளார்.