Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 40 நாட்களுக்குப் பின் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்: பயணிகள் ஆர்வம்

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (08:53 IST)
சென்னையில் 40 நாட்களுக்கு பின்னர் இன்று மெட்ரோ ரயில் ஓட தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்
 
ஜூன் 28ஆம் தேதி வரையிலான ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில் ஒன்று சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் என்பது என்பது தெரிந்ததே இந்த நிலையில் இன்று காலை ஆறு முப்பது மணிக்கு மெட்ரோ ரயில் ஓட தொடங்கியது. சென்னையில் 40 நாட்களுக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளதை அடுத்து பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் பயணம் செய்து வருகின்றனர் 
 
மெட்ரோ ரயிலில் பயணிகள் அமர்ந்து மட்டுமே செல்ல வேண்டும் என்றும் பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிந்து இருக்கவேண்டும் என்றும் தனி மனித இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும்,மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலும் இதர நேரத்தில் 10 நிமிடத்திற்கு ஒரு ரயிலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 40 நாட்களுக்குப் பின்னர் சென்னையில் மெட்ரோ ரயில் ஓட தொடங்கியதை அடுத்து சென்னையில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக கருதப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments