எனது தற்கொலை அறிக்கை என கூறி முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திரமோடிக்கு டேக் செய்துள்ள நடிகை மீரா மிதுன்,
"நான் என்ன சொல்கிறேன் என்று எங்கள் முதல்வருக்குத் தெரிந்தால் ஒரு தமிழன் என்ற பெருமையுடன் இறந்திடுவேன். ஒரு ஆண் என் வாழ்க்கையை 24/7 நேரமும் கண்காணிக்க அனுமதிக்க முடியாது. என்னைப் பின்தொடர்வது, 3 வருடங்களுக்கு மேல் என்னை சித்திரவதை செய்வது என என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கட்டுப்படுத்துவது என்பது பாலியல் துன்புறுத்தல். நான் தற்கொலை செய்து கொள்வேன்.. என் தற்கொலைக்கு அஜித் ரவி தான் காரணம் என கூறியுள்ளார்.
அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் அஜித் ரவியின் அமைப்பை விட்டு விலகினேன். அந்த அமைப்புக்காக நான் வேலை செய்து, அழகிப் பட்டம் வென்றேன். ஆனால், அஜித் ரவி செய்த அநீதியால் அந்த அமைப்பை விட்டு விலகி என் சொந்த அமைப்பை உருவாக்கினேன். இதையடுத்து ஆஜீத் ரவி தன் அதிகாரம் மற்றும் பணத்தை வைத்து எனக்கு பிரச்சனைகள் கொடுத்தார். என் மீது போலி வழக்குகள் தொடர்ந்து என் பெயரை டேமேஜ் செய்தார்.
அவரால் எனக்கு என் குடும்பத்தில் பிரச்சனை, சினிமா துறையில் பிரச்சனை, அதோடு தமிழ்நாட்டில் இருக்கும் கிரிமினல்களை வைத்து கொடுமைப்படுத்துகிறார். எனவே நான் தற்கொலை செய்துக்கொள்ளப்போகிறேன். இதற்கு முழுக்க முழுக்க அஜீத் ரவி மட்டும் தான் காரணம். சுஷாந்த் சிங் ராஜ்புட் போன்று நான் இறந்த பிறகு அஜீத் ரவியை தண்டிக்கவேண்டும். இது தற்கொலை அல்ல கொலை என அறிக்கை வெளியிட்டுள்ளார்.